கொழும்பு – சவூதி அரேபியா இடையிலான விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!

கொழும்புக்கும் தம்மாமுக்கும் இடையில் மற்றும் கொழும்புக்கும் ரியாத்துக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் எதிர்வரும் 1 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று (22) அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எமது முதன்மை முன்னுரிமையாகும் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம், வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்த சூழ்நிலை இருப்பதாக மதிப்பிடப்பட்ட பின்னர் விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேசம்), WhatsApp +94 74 444 1979 (உரையாடல் மட்டும்) ஆகிய இலக்கங்கள் ஊடாகவும், உங்கள் பயண முகவர் மூலமாகவும் அல்லது www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிட்டும் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JaffnaDevelopment
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவிற்கு கடற்படையில் சம்பளமாக 51 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்பாடு!
TempleRobbery
அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம், விகாரையில் சூடாமணிகள் திருட்டு: கலஹாவில் பரபரப்பு!
ShiranthiRajapaksa
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை: விசேட மருத்துவக் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது
GalagodaAththeGnanasaraThero
ஞானசார தேரர் ஆதரவாளர் மீது தாக்குதலா? சமூக வலைத்தள வீடியோவுக்கு பொலிஸார் முற்றுப்புள்ளி
SivarasaAnojan
அனோஜனின் விடுதலைப் பயணம்: அரச ஆதரவு தொடரும் என ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் பதிவு!