நாமலுக்கு எதிரான வழக்கில் முக்கிய திருப்பம்: சாட்சியமளிக்க நாட்டிற்கு வருகிறார் முக்கிய அதிகாரி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக உள்ள விசாரணைக்காக பிரெஞ்சு தடயவியல் புலனாய்வாளரான யூசர் கலீல் நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச வழக்கின் விசாரணைக்காக, அவர் இலங்கைக்கு வரவுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை முன்னெடுத்த யூசர் கலீல் இந்த வழக்கின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், புலனாய்வு அதிகாரி நாட்டை வந்தடைந்தவுடன் நீதிமன்றில் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எழுந்துள்ள இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளில் இந்தச் சாட்சி விசாரணை விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.

எயார்பஸ் நிறுவனத்தின் சர்வதேச இலஞ்ச ஊழல் தொடர்பான விரிவான தடயவியல் விசாரணைக்கு யூசர் கலீல் தலைமை தாங்கியிருந்தார்.

இந்த விசாரணையின் மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய சட்டவிரோத தரகு கொடுப்பனவுகள் கண்டறியப்பட்டதுடன், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணைக்கும் இது வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Batticaloa
18 ஆண்டுகால வழக்கில் அதிரடித் தீர்ப்பு: 8 பேருக்கு உச்சபட்ச தண்டனை விதித்த நீதிமன்றம்!
Thirumavalavan
வல்வெட்டித்துறைக்குச் சென்ற தொல். திருமாவளவன்: தமிழக அரசியலில் புதிய சர்ச்சை
Batticaloa
விவாகரத்து வழக்கிற்குப் பின் ஏற்பட்ட மோதலில் கணவன், மனைவி உட்பட மூவர் கைது!
JaffnaNews
வழக்கு விசாரணைக்காகச் சென்ற தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்
Jaffna
அபாய கட்டத்தை எட்டியது யாழ்ப்பாணத்தின் காற்றின் தரம்!
Kaduwela
அதிகாலையில் நிகழ்ந்த கோரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி