🔴 UPDATE யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு!

இன்று காலை 06.03 மணிக்கு, மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வருகை தந்த நபர் தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது. கையில் கொண்டு வந்த பணிஸை சாப்பிட்டுக்கொண்டு, பின்னர் அங்கு பச்சை மிளகாயை வாங்கிக்கொண்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு வந்தவர் கைகளுக்கு கறுப்புநிற கையுறைகளையும், தலையில் தலைக் கவசத்தையும் அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

குறித்த நபர் அங்கிருந்து சென்றதும், சந்தையில் இருந்தவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர். சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!