ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
![Russian An-24 aircraft after a regional passenger plane goes missing in Siberia/Screen grab/Reuters]](https://a7tv.com/wp-content/uploads/2025/07/image-10.png?v=1753341733)
இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை நெருங்கும் வேளையில், விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. மேலும் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதால் விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் உறுதியானதும், ரஷ்யாவின் அவசரநிலை சேவைத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், Mi-8 ரக ஹெலிகாப்டர் காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
Source – www.aljazeera.com