மலேசியா – கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துக் நேற்று முன்தினம் காலை 8.40 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் பொலிஸார் நடத்திய ஆய்வில், உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்த 26 வயதுடைய ஊழியர் என்பது தெரியவந்தது.
9வது மாடியில் இருந்து விழுந்த அவர், இரண்டாவது மாடியில் உள்ள நீச்சல்குளத்தின் அருகே சடலமாக கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கோலாலம்பூர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே அந்த நபரின் மரணத்தை உறுதி செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
