கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வானிலை முன்னறிவிப்புகளை அடுத்து, கொழும்பு மாநகர சபை (CMC), ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அவசரகால அனர்த்த பதில் நடவடிக்கையை அறிவித்துள்ளது.
மாநகர சபை தனது அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அவசரகால பதில் பிரிவுகள் பாதகமான வானிலையால் பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக முழுமையாகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின்படி, பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், தற்காலிக வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேவைப்பட்டால் உதவிகளுக்காக மாநகர சபையைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்கான தொலைபேசி எண் 011-2422222 மற்றும் அவசரத் தொலைபேசி எண் 011-2686087
