நாளை (1) மாத்திரம், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண்ட (அனைத்து வாகனங்களும்) வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளன.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து வகையான வாகனங்களும் நாளை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
