மீண்டும் குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு..

மட்டக்களப்பில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி பகுதியில் உள்ள தொல்பொருள் இடம் பகுதிக்கு சென்று நேரலையொன்றை செய்துள்ளதுடன் அங்கு விகாரையினை அமைக்கமுன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பன்குடாவெளி பிரதேசம் நூறு வீதம் இந்துக்கள்,கிறிஸ்தவ மக்கள் வாழும் பகுதியாகும்.அங்கும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் எந்த பௌத்த மக்களும் வாழவில்லை. ஆனால் அங்கு சுமார் 1000வருடத்திற்கு முற்பட்ட தொல்பொருள் சின்னம் காணப்படுகின்றது.

அது எந்த மதத்திற்குரியது என்பது தொடர்பிலான எந்த தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறித்த இடம்பௌத்தர்களுக்கு உரியது என பல காலமாக மதங்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்திவருகின்றார்.

ஏற்கனவே 2020ஆம் ஆண்டு அப்பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறித்த பகுதி பௌத்த மதத்திற்குரிய பகுதி அங்கிருந்து அனைவரும் வெளியேறவேண்டும் என்று கூறியதுடன் அங்கிருந்த தொல்பொருள் அதிகாரிகளும் தாக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு தொல்பொருள் திணைக்களம் அதனை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் விவசாயிகள் மக்கள் அந்த பகுதிகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் (19)பன்குடாவெளி பகுதிக்கு சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறித்த பகுதியில் புத்தர் சிலையொன்றை அமைத்து விகாரை அமைக்கப்படவேண்டும் என்ற அழைப்பினை சிங்கள மக்களுக்கு விடுத்துள்ளார்.

இது எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நிகழ்வாக மாறும் நிலையுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்