காதலியைக் கொன்று விட்டுத் தன்னுயிரையும் மாய்த்த காதலன்!இலங்கையில் பதிவான மற்றுமொரு கொடூர சம்பவம்!

இளம் பெண்ணை கொன்று அவரது பெற்றோரை வெட்டி காயப்படுத்திய இளைஞன் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பதியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரங்கல பகுதியில் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் அவரது காதலன் என கூறப்படும் இளைஞனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் தனது காதலி எனப்படும் இளம் பெண்ணொருவரின் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன் இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை மேற்கொண்டார்.

இத்தாக்குதலினால் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹாஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் 23 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பதியத்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

5 glas
தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேர்களுக்காக காத்திருக்கும் 3,07959 மாணவர்கள்
New Project t (13)
செம்மணி மனித புதைகுழி வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்!
exam
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: வெளியான முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
யாழில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (9)
விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடியினர் வெளியிட்ட தகவல்!
New Project t (7)
வீதியில் காரை நிறுத்தி மக்களுக்கு “ஹாய்” சொன்ன ஜனாதிபதி அநுர: வைரலாகும் காணொளி!