கைதான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பாக மல்லாகம் வழக்கு இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்த காணியில் வளர்ந்துள்ள புதர்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மேற்கொண்டார்.

இதன்போது தமது காணியின் வேலியானது சேதப்படுத்தப்பட்டதாக வழக்கு இடம்பெற்று வரும் பெண்ணும் அவரது உறவினர்களும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா திடீரென அந்த பெண் மீதும், அவரது சகோதரன் மீதும் காலால் தாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பாதுகாப்புக்காக அந்த பெண் கல்லினால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது கை துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை நோக்கி உன்னை கொலை செயாவேன் என்றும், தலைமையில் சுடுவேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

பின்னர் அங்கு வந்த இளவாலை பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். அதன்பின்னர் அருச்சுனா இளவாலை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் பிரகாரம் அந்த பெண் இளவாலை பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை அருச்சுனா எம்.பி கொலை அச்சுறுத்தல் விடுக்கும் காணொளியானது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றையதினம் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.

அந்தவகையில் இளவாலை பொலிஸார் அவரை துப்பாகியுடன் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இந்நிலையில் அவரை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்