தையிட்டி விகாரை காணி விவகாரம்: நாளை காலை மீண்டும் அளவீட்டுப் பணிகள் ஆரம்பம்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணி உறுதி பத்திரங்களை வைத்துள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை அளவீடு செய்து காணி வரைபடங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கான காணி அளவீடுகளை கடந்த 17ஆம் திகதி முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் , காணி உரிமையாளர்கள் தையிட்டி விகாரை பகுதியில் கூடிய வேளை , பிக்குவின் பொலிஸ் முறைப்பாடு காரணமாக அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் 28ஆம் திகதி காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் , அன்றைய தினம் காணி உறுதி பத்திரங்களுடன் காணி அமைந்துள்ள பகுதிகளுக்கு காணி உரிமையாளர்கள் வருகைதந்து , தமது காணிகளை அடையாளம் காட்டுமாறு மாவட்ட செயலர் கடிதம் மூலம் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

shritharan mp
"செம்மணி மனிதப் புதைகுழி தமிழ் இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி!" நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
buddhist monk arrested
அமெரிக்க பொலிஸாரின் 'ஒப்பரேஷன் ரெட் கார்ட்' அதிரடி: இலங்கை தேரர் உட்பட 7 பேர் கைது!
Sugeeswara Bandara
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர பண்டார கைது!
trincomalee
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய நிலத்தடி சிறைக்கு சீல் வைக்கப்படுகிறது!
Kankesanthurai Port
காங்கேசன்துறை துறைமுகத்தில் அதிரடி: ஸ்கேனிங் பரிசோதனையில் அம்பலமான நூதன தங்கம் கடத்தல்!
iran-us
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று கையெழுத்தாகிறது!