யாழில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்: பொலிஸார் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலை ஒன்றில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இரு இளைஞர்கள் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நெடுந்தீவு மதுபானசாலையில் நேற்று இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர் குழு மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டு பேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மீதும் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது ஒருவர் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் சென்றவர்கள் தேடி கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, வீதியால் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Charlie Kirk
அமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!
mathiri
மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
police
துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்த பொலிஸார்: ஐவர் கைது!
accident
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் படுகாயம்
mahinda
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த!
New Project t (9)
உடன் அமுலுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டம்!