26 பாடசாலை வாகனங்களுக்குத் தடை: அதிரடிச் சோதனை

திஸ்ஸமஹாராம நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, 23 பாடசாலை பேருந்துகள் மற்றும் 3 வேன்கள் போக்குவரத்துக்குத் தகுதியற்றவை என அடையாளம் காணப்பட்டு அவற்றுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.

தெபரவெவ ஜனாதிபதி வித்தியாலயத்திற்கு முன்னால் குறித்த வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மோட்டார் வாகனப் பரிசோதகர்களின் பங்கேற்புடன் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது 29 வாகனங்கள் சோதனையிடப்பட்ட நிலையில், அவற்றில் 26 வாகனங்கள் (சுமார் 90%) ஓடுவதற்குத் தகுதியற்ற நிலையில் இருந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

குறித்த வாகனங்களை மீண்டும் திருத்தி, மோட்டார் வாகனப் பரிசோதகர் ஒருவரிடம் காண்பித்து உரிய தகுதிச் சான்றிதழைப் பெற்றால் மாத்திரமே அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதிக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!