அநுர அரசாங்கத்தால் ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அநுர அரசாங்கம் பொறுப்பேற்று 14 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏழு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஊழல் மோசடிகள் குறைத்துள்ளதாக அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்தார்.

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் குறியீட்டில் 187வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 102வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு வர்த்தகத்தில் 1.7 பில்லியன் டொலர் வருமானத்தை பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 14 மாதங்களில் நாடு பல பொருளாதார சாதனைகளை அடைந்துள்ளது.

ஏற்றுமதி, வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாத் தொழில்கள் மூலம் 29.3 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையின்படி, ஊழல் நிறைந்த நாடுகளின் குறியீட்டில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

உலகின் ஊழல் நிறைந்த நாடுகளின் குறியீட்டில் முன்னர் 187வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 102வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சமகால அநுர அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழல் எதிர்ப்புத் திட்டங்கள் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளதாகவும், ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sagara Kariyavasam
பொலிஸ் மா அதிபருக்கு அச்சுறுத்தல்?: சாகர காரியவசமுக்கு எதிராக குற்றவியல் விசாரணைப் பணியகம் நீதிமன்றில் மனு
Hikkaduwa Footwear
மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் இல்லை: ஹிக்கடுவை பாதணி நிறுவனம் பகிரங்க அறிக்கை!
easter attack
உயிர்த்த ஞாயிறு வழக்கு:மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு பாதுகாப்பு தீவிரம்!
srilanka weather
வானிலை மையத்தின் அவசர அறிவிப்பு: பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
basil rajapaksa
வழக்கில் முன்னிலையாகாத பசில்: அமெரிக்க நீதிமன்றம் மூலம் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
Ananda Wijepala
சாகர காரியவசத்திற்கு அரசு கடும் எச்சரிக்கை: பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்ததால் பரபரப்பு!