அக்குரேகொட இரட்டைக் கொலை: சகோதரர்கள் இருவர் அதிரடி கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கொட்டாவையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, அவர்களால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் கொல்லப்பட்டிருந்தனர்.

அதனைதொடர்ந்து, சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்த நிலையில், பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்