முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் சந்திக்கும் உத்தியோகபூர்வ முதல் இராஜதந்திர சந்திப்பு இதுவாகும்.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சீனத் தூதருக்கும் இடையிலான கலந்துரையாடல் இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தியது.
இதேவேளை, விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் சீன தூதுவர் நேற்று சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சீனத் தூதர் எதிர்காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் சக்திவாய்ந்த அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.