யாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடம் வாட்ஸாப்பில் பணம் சேகரிப்பு!

யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியில் ICT பாடநெறிக்கான Viva பரீட்சைக்கு வருகின்ற மதிப்பீட்டு உத்தியோகத்தர்களுக்கான (உணவு, தங்குமிடம்.போக்குவரத்து) அனைததுக்கும் என பரீட்சை எழுதும் மாணவர்களிடம் வாட்ஸாப்பில் பணம் சேகரிக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த தொழில்நுட்பக் கல்லூரியில் எதிர்வரும் 12- 13-ம் திகதிகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கான வாய்மொழி மூல பரீட்சைகள் இடம்பெற உள்ளன.

இதற்காக கொழும்பிலிருந்து வருகைதரும் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்காக குறித்த நிதி சேகரிப்பு விரிவுரையாளர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் இடம்பெறுவதாக மாணவர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

பரீட்சை நடாத்துவதற்கு வரும் உத்தியோத்தர்களுக்கு அரசாங்கம் தங்குமிடம் போக்குவரத்து என்பவற்றை வழங்குகின்ற போதும் மாணவர்களிடம் பணத்தை கேட்பது எவ்விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.

குறித்த விடயம் தொடர்பில் தொழில் நுட்பக் கல்லூரியில் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறான விடயம் ஒன்று whatsapp ஊடாக இடம்பெறுவதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும் மாணவர்கள் வரும் நிதி வழங்க வேண்டிய தேவை இல்லை என அறிவுறுத்தல் வழங்கியதாக தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் பிரதமரும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமர சூரியாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!