காலி தேசிய மருத்துவமனையில் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடலங்களை ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதான நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை உத்தரவிட்டுள்ளார்.

காலி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலித் துறைமுக காவல்துறையினர் காலி பிரதான நீதவான் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையினைப் பரிசீலித்த நீதவான், இந்த விசேட கட்டளையை பிறப்பித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கடல்சார் விபத்துக்கள் காரணமாக உயிரிழந்த இந்த மாலுமிகளின் உடலங்கள், மேலதிக சட்ட நடைமுறைகளின் பின்னர் அவர்களின் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
