வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியமையால் ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுபானம் அருந்தியமையால் சுகவீனமடைந்த மேலும் மூவர் தற்போது நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சட்டவிரோத மதுபான விநியோகம் அல்லது விற்பனையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
