பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!

டிட்வா சூறாவளியால் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரண சான்றிதழை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இற்றைப்படுத்தப்பட்ட சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளதாக எமது செய்தி சேவைக்கு அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, காணாமல் போன வெளிநாட்டவர்கள் தொடர்பில் அவர்களுடைய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொன்சூலர் நாயகம் அலுவலகம் மற்றும் தூதுவர்கள் ஊடாக, பதிவாளர் நாயகத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்

அந்த விண்ணப்பம் தொடர்பில் பதிவாளர் நாயகத்தினால் விடயங்கள் ஆராயப்பட்டு, தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கான மரணச் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என பதிவாளர் நாயகம் குறிப்பிட்டார்.

டிட்வா சூறாவளியின் பின்னர் பேரிடர் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள, 22 மாவட்டங்களில் தங்கி இருந்த வெளிநாட்டவர்களுக்கு மாத்திரமே இந்த நடவடிக்கை பொருந்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய 22 மாவட்டங்களிலும் தங்கி இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இந்த நடைமுறை அமுலாக்கப்படும் என பதிவாளர் நாயக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
கடமையின் போது உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மரணத்தின் பின் பதவி உயர்வு; தலா 5 இலட்சம் இழப்பீடு!
colombo
பறவை மோதியதால் அவசர நிலை: கட்டுநாயக்கவில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாகத் தரையிறங்கிய துருக்கி விமானம்!
anura kumara dissanayake
பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற நிறுவனங்களை மூட ஜனாதிபதி உத்தரவு!
prison
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மோதல்; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
jaffna
யாழ்ப்பாணத்தில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை: காரில் வாள்கள், ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது!
buddhist monk
"சிறுமிகளுக்கு நேரும் கொடூரம்; மதத்தலைவர்கள் தப்பி ஓட சட்டம் இடமளிக்கலாமா?"