அரச நிறுவனங்களுக்கான விடுமுறை தொடர்பில் வௌியான தகவல்!

அரச அலுவலகங்கள் இன்றிலிருந்து(15/04/2026) வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய தினங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, அரச ஊழியர்களுக்கான புத்தாண்டு விடுமுறை மேற்குறிப்பிட்ட இரண்டு தினங்கள் மாத்திரமே ஆகும். எனவே, இன்று அரச அலுவலகங்களின் அனைத்துப் பணிகளும் வழமைப் போல இயங்கும்.

இந்தநிலையில், புத்தாண்டு காரணமாக தங்களுடைய சொந்த ஊருக்குச் சென்ற பயணிகள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இன்று(15) முதல் பேருந்துகள் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழ அறிவித்துள்ளது.

இதற்குரிய தேவையான அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாணப் போக்குவரத்து அதிகாரசபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதன் செயல்திட்டப் பணிப்பாளர் ஷெரீன் அதுகோரல தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இன்று ஒரு வழக்கமான அலுவலக நாள் என்பதால், அலுவலக தொடருந்து சேவைகள் வழக்கம் போல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவையின் அடிப்படையில் உரிய தொடருந்துகள் சேவையில் சேர்க்கப்படும் என்று இலங்கை தொடருந்து திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!