இலங்கையில் பாரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிப்பு!

இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தேசிய நீர்வழங்கல் சபையினால் முன்னெடுக்கப்பட்ட குழாய் கிணறு தோண்டும் பணியின் போதே இந்த பாரிய நீர் ஊற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நீர் ஊற்றிலிருந்து ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் (10 கன மீட்டர்) நீர் தொடர்ச்சியாக வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் மன்னார் – மடு பகுதியில் கண்டறியப்பட்ட நீர் ஊற்றே மிகப்பெரியதாக கருதப்பட்டது. அங்கிருந்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றர் நீரே பெறப்பட்டிருந்தது.

பாறைகளை ஆய்வு செய்து, நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை இனங்கண்டு இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!