குடும்பத்தகராறு கொலையில் முடிந்தது: கணவனின் வாள்வெட்டுக்கு இலக்காகி மனைவி பலி!

அனுராதபுரம், நொச்சியாகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மனைவியை வெட்டி கணவன் படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக, மனைவியை வாளால் வெட்டிப் படுகொலை செய்த கணவன் தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் நொச்சியாகமை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு, கொலையாளியான 45 வயதுடைய கணவன் கடுமையான மதுபோதையில் வீட்டுக்கு வந்தபோது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்கனவே இருந்த குடும்பத்தகராறு தொடர்பில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த கணவன், வீட்டிலிருந்த வாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கடுமையான வெட்டுக் காயங்களுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொலையாளியான கணவன் அப்பிரதேசத்தை விட்டு தப்பியோடித் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தப்பியோடியுள்ள சந்தேகநபரான கணவனைக் கைது செய்வதற்காக நொச்சியாகமை பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!