தந்தையை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சைப் பலன் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

கடந்த மே மாதம் 26ஆம் திகதி காலை இடம்பெற்ற கனரக வாகனம் – கார் மோதிய கோர விபத்தில் யாழ். இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்த விபத்தில் அவரின் மனைவி (சீதாலக்‌ஷ்மி – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்), மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தியாவுக்குச் சுற்றுலா சென்று நாடு திரும்பிய பின்னர், சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருடைய (பிரபாகரனின்) மூத்த மகனான 27 வயதுடைய அக்‌ஷை நசிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!