குழந்தைகளுக்கான மருந்து தட்டுப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் அச்சம்!

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சில மருந்துகள் தொடர்ந்து விநியோகிக்கப்படாததால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.

வலிப்பு நோய்களுக்கு வழங்கப்படும் Ethosu ximide, குழந்தைகளுக்கான வலிப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு உட்பட பச்சிளம் குழந்தைகளுக்கான விசேட வைத்திய நிபுணர்களின் கிளினிக்குகளுக்கு வழங்கப்படும் பல வகை மருந்துகள் தொடர்ந்து வழங்க முடியாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டணியின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

தனியார் மருந்தகங்களில் இருந்து இந்த மருந்துகளை வாங்குவதற்கு செலவிடப்படும் பாரிய தொகை குறித்து சுகாதார அமைச்சும் அரசாங்கமும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டணி கூறுகிறது.

வலிப்பு ஏற்படுவதால் குழந்தைகளுக்கு வழங்கப்படும் எத்தோசுக் சிமைடு Ethosu ximide மருந்தை ஒரு மாத பயன்பாட்டிற்கு தனியார் மருந்தகங்களில் இருந்து வாங்க குறைந்தது ரூ. 30,000 செலவிட வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் வறுமையின் பிடியில் வாழும் பொற்றோர்களின் நிலைமை வார்த்தைகளில் சொல்ல முடியாத அவல நிலைமை என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்