ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மோதல்: பணிப்பெண்களை தாக்கிய வெளிநாட்டவர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த UL 266 விமானத்தில் பயணித்த பயணி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க தயாரான போது, ​​அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிந்து தங்கள் இருக்கையில் அமருமாறு அறிவிக்கப்பட்ட போதும், அதனை மீறி குறித்த பயணி கழிப்பறைக்குச் செல்ல முயன்றதால், அங்கு மோதல் ஏற்பட்டது.

பின்னர் பணிப்பெண்கள் இது தொடர்பாக விமானிக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரான சவுதி அரேபிய நாட்டவரை கைது செய்தனர்.

மலேசியாவுக்குச் செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக வந்த 28 வயதான குறித்த சவுதி அரேபிய நாட்டவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!