உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இலங்கையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (21) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அந்தவகையில், நேற்று (19) முற்பகல் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனையாகிவந்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு பின் 2000 ரூபாயால் அதிகரித்து 370,000 ரூபாயாக, விற்பனையானது.

இந்நிலையில், இன்று (21) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 351,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க டொலர்களைத் தாண்டியதே உள்ளூர் சந்தையில் இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்கள் உலகளாவிய முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி ஈர்த்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
