சிறையிலுள்ள கைதிகளின் மனிதாபிமான நடவடிக்கை !

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று வெள்ளிக்கிழமை (05) கையளித்துள்ளனர்.

இவ்வுலர் உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டு பின்னர் அவை மட்டக்களப்பு கச்சேரியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் நேரில் சென்று கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான சிறைக்காவலர் ரத்நாயக்க உள்ளிட்ட ஏனைய உத்தியோதர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்