வீடொன்றில் புதைக்கப்பட்ட மனித கால்! தென்னிலங்கையில் பரபரப்பு சம்பவம்!

தென்னிலங்கையில் வீடொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் உடற்பாகம் (மனித கால்) ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை , வலஸ்முல்ல பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் பொலிசாரினால் நேற்று (16.07.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித கால், இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையின் உடற்பாகமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன நபரின் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, அவரின் வீட்டின் பின்பகுதியில் பொலிசார் தேடுதல் நடத்தியிருந்தனர்.

கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கணவனுக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி மோதல் நிலைமை ஏற்படுத்தாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!