🔴 VIDEO வவுனியாவில் ஆசிரியையின் தலையை வெட்டிக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்ற கணவன்

புதிய இணைப்பு

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த ஆசிரியையான சுகிர்தரன் சுவர்ணலதா, கர்ப்பிணி பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இவரது கணவரான கோ.சுகிர்தரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனைவியின் தலையுடன் கணவன்! இலங்கையை உலுக்கிய சம்பவம் – வெளியாகிய பகீர் காணொளி 🔴READ MORE – https://a7tv.com/husband-who-went-to-the-police-station-after-cutting-the-teachers-head-in-vavuniya/ #a7tvnews #a7tv #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoda

Posted by A7tv News on Tuesday, June 3, 2025

முதல் இணைப்பு

வவுனியாவில், குடும்பத் தகராறுகளின் காரணமாக தனது மனைவியை கொலை செய்த கணவன் ஒருவர், கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்துக் கொண்டு புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

கொல்லப்பட்டவர், 32 வயதான ரஜூட் சுவர்ணலதா என்பவர், அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவிக்கிடையில் நீண்ட காலமாக குடும்பத் தகராறுகள் நிலவி வந்துள்ளன. இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, கணவன் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

நயினாமடு காட்டுப்பகுதியில், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிளில் புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். பொலிஸாருக்கு, தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!