“அரசியல்வாதிகளை நம்பினால் பூஜித்திற்கு நடந்ததே நடக்கும்”: பொலிஸ் உயர்மட்ட ‘வாட்ஸ்அப்’ உரையாடலில் வெளிவந்த தகவல்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர், பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்களுக்கும் இடையே “WhatsApp” குழு தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதில், இந்தத் தீர்ப்பு நாட்டின் பொலிஸ் அதிகாரிகள் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தே விவாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகையில், நபர் ஒருவர் தனக்கு மற்றொரு நபரால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அவ்வாறு முறைப்பாடு செய்த நபர், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய நபராலேயே கொல்லப்பட்டால், பொலிஸ் அதிகாரிக்கே மரண தண்டனை கிடைக்கும் நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பொலிஸில் கடமையாற்றுவது ஆபத்தான நிலைமை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மற்றொரு பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்ட கருத்து,

பொலிஸ் மா அதிபராக பதவி வகிப்பது இதன் மூலம் பாரிய அபாயத்தைப் பொறுப்பேற்பதாக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த குழு விவாதத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் முன்வைத்த கருத்துக்களுடன் உடன்பட்ட பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதியுடன் இந்த நிலைமை குறித்து விவாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் தோல்வியடைந்து வேறு அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விதி தனக்கும் வரக்கூடும் என்ற பயம் பொலிஸ் மா அதிபருக்கும், பெரும்பாலான பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

“இந்த வழியில் பொலிஸைக் கொண்டு செல்ல முடியாது. பொலிஸை விட்டு விலகிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவான பொலிஸ் அதிகாரிகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழுவினரும் இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

“அரசியல்வாதிகள் சொல்வதைக் கேட்டு வேலை செய்து, இறுதியில் பூஜித்விற்கு நடந்ததே நடக்கும்” என்ற கருத்து பொலிஸாருக்குள் பலமாக உருவெடுத்துள்ளதால், பொலிஸ் துறை பெரும் சரிவைச் சந்திக்கும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும், அரசாங்கத்தின் மீது பொலிஸாருக்குள் இருந்த கடும் அதிருப்தி இதன் மூலம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!