.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டால், கொழும்பு நகரத்திற்கான நீர் விநியோகம் தடைப்படக்கூடிய ஆபத்து உள்ளதாக அந்த சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் எவ்விதப் பிரச்சினையும் இன்றி நீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். இருப்பினும், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக எச்சரித்துள்ளன. நீர்மட்டம் இன்னும் சுமார் 7 முதல் 8 அடி வரை உயர்ந்தால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்குவதில் எங்களுக்குப் பிரச்சினைகள் எழும். அவ்வாறு நடந்தால் தான் கொழும்பு நகரத்திற்கான நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும். அந்த நிலைமையைச் சமாளிக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்