சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளியான தகவல்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்று பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிடம் எமது செய்திச் சேவை வினவியது.

டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என நீதி அமைச்சர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார்.

அந்த விடயம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை பதிவாகவில்லை எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முறையாக சமர்பிக்கும் பட்சத்தில், அவற்றை ஆராயந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இலங்கை இராணுவத்தினால், டக்ளஸ் தேவானந்தாவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வெலிவேரிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

திட்டமிட்ட குற்றக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட போதே, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!