யாழ்ப்பாணம் செல்வோரின் கவனத்திற்கு: வெளியான தகவல்

குருநாகல் – மாஹோ சந்தி மற்றும் அநுராதபுரம் தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான புனரமைப்பு நடவடிக்கை காரணமாகக் குறித்த மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வடக்கு தொடருந்து மார்க்கத்தில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் தொடருந்துகள் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை மஹோ சந்தி வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் அநுராதபுரம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற 5 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவிகள் மூலம், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த தொடருந்து மார்க்கங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!