யாழில் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுகம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு இணங்க GovPay என்ற அரசின் டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்வு துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலும், நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரது பங்கேற்புடன் நடைபெற்றது.

நாட்டை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வழியாக சாதாரண மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வெளிப்படையானதும் சிக்கனமானதுமான மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் அரச திட்டங்களுக்கு வழிகாட்டும் பெரும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

மேலும் GovPay செயலியின் மூலம், மக்கள் அரசு சேவைகளை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் நம்பகத்தன்மையாகவும் பயன்படுத்த முடியும்.

இது அழுத்தங்களை குறைப்பதோடு மட்டுமில்லாது அரசுத் துறைகளில் நம்பிக்கையை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகும்.

இதன் இறுதி இலக்காக இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் சேவையின் மூலம் பாதுகாப்பும், நம்பிக்கையும் வழங்குவதுடன், அனைவரும் பங்கு பெறக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் எதிர்காலத்தை கட்டமைப்பதே நோக்கமாகும்.

இந்நிகழ்வில் லங்கா பே (Lanka pay) துணை தலைமை அதிகாரி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டாரகள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Charlie Kirk
அமெரிக்காவில் ட்ரம்பின் மிகப்பெரும் ஆதரவாளர் சுட்டுக்கொலை!
mathiri
மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
police
துப்பாக்கிச் சூட்டு முயற்சியை முறியடித்த பொலிஸார்: ஐவர் கைது!
accident
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பலர் படுகாயம்
mahinda
உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த!
New Project t (9)
உடன் அமுலுக்கு வந்துள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து சட்டம்!