இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல் மீதான தாக்குதல் – பதிலடிக்கு தயாராகும் ஈரான்

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான IRIS Dena மீது இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “தகுந்த பதில் வழங்கப்படும்” என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.

போர்ப் பயிற்சியை முடித்துவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், நேரடிப் போரில் ஈடுபடாத நிலையில் தமது கடற்படையினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், IRIS Dena கப்பலின் பெயரும் அதன் பணியாளர்களின் உயிர் தியாகமும், ஈரானிய கடற்படை வரலாற்றில் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் கடற்படை சக்தியை மேலும் பலப்படுத்துவதற்கும் உறுதியான தீர்மானத்துடன் செயற்படுவதாக ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதாமி வலியுறுத்தினார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!