கொட்டஞ்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர், அப்பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளின்படி, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர், சிற்றூந்தில் வந்த துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானது தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள், சிற்றூந்தில் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்ற காட்சியும் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் திட்டமிட்ட குற்றவாளியான பூங்கொடி கண்ணாவுக்கு நெருக்கமானவர் என்றும், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொட்டஞ்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
