🔴 VIDEO தோல்வியால் கடுப்பான கார்ல்சன்.. வரலாற்றில் இடம் பிடித்த குகேஷ்!

நோர்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான மாக்ன்ஸ் கார்ல்சனை உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் தோற்கடித்து அபார வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

நோர்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

வெற்றியடைந்ததும் குகேஷ் Reaction.. விரக்தியில் மேக்னஸ் Reaction.. #gukesh | #chess | #won | #GukeshDommaraju | #GrandMaster | #WorldChessChampion

Posted by A7tv News on Monday, June 2, 2025

இதன்படி, நேற்று நடந்த போட்டியில் குகேஷ், நோர்வேவின் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட கார்ல்சனே பெரும்பாலான சமயங்களில் ஆதிக்கம் செலுத்தினார்.

எனினும், மிகவும் சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ் இறுதியில் வெற்றி பெற்று, கார்ல்சனுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால், ஏமாற்றம் அடைந்த கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் நோர்வே செஸ் போட்டியின் புள்ளிகள் பட்டியலில், குகேஷ் 8.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!