🔴 VIDEO கடைசி நேரத்தில் வெற்றியை நழுவவிட்ட குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

நார்வேயில் இடம்பெற்ற செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மக்னஸ் கார்ல்சனுக்கு 54 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் சென்று சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார்.

அதே சமயம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார். 10-வது சுற்றான இறுதி சுற்றில் குகேஷ், அமெரிக்காவின் அனுபவம் வாய்ந்த வீரர் ஃபேபியானோ கருவானாவுடன் மோதிய நிலையில், குகேஷ் அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தார்.

தோல்வி அடைந்தாலும் புள்ளி விவர பட்டியலில் குகேஷ் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். குகேஷ், கருவானாவை வென்றிருந்தால், அவருக்குத் மொத்தம் 16.5 புள்ளிகள் கிடைத்திருக்கும். அதாவது மக்னஸ் கார்ல்சனை விட அரை புள்ளி அதிகமாக இருந்திருக்கும். அப்படியென்றால், குகேஷ் தான் 2025 நோர்வே செஸ் சாம்பியனாக அறிவிக்கப்பட்டிருப்பார். ஆனால், கடைசி நேரம் சற்று தடுமாறி கடைசி சுற்றில் தோல்வி அடைந்தது பெரிய சோகமான விஷயமாகவும் அமைந்துள்ளது.

பெயர் நார்வே கிரோனர் இந்திய ரூபாய் மதிப்பு
கார்ல்சன் 700,000 ₹54 லட்சம்
கருவானா 350,000 ₹27 லட்சம்
குகேஷ் 200,000 ₹15.5 லட்சம்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!