யாழில் உள்ள பல தமிழ் கட்சிகள் எங்களை “லவ்” பண்ணுகிறார்கள்!

தேசிய மக்கள் சக்தியினை யாழ்ப்பாணத்தில் பல அரசியல்வாதிகள் லவ்வாக பார்க்கின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டவரிடம் , யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு யாருக்கு என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தேசிய மக்கள் சக்தி தற்போது காணப்படுகிறது. அதனால் பல்வேறு தரப்பினரும் எம்மை அணுகி பேச்சுக்களை நடாத்தி வருகின்றனர்.

தற்போது பலரும் எம்முடன் அன்பாக பேசுகின்றனர். பலர் எம்மை லவ்வாக பார்க்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் தேர்தல் காலத்தில் எங்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு எதிராகவும் மாநகர சபை உறுப்பினர் கபிலனுக்கு எதிராகவும் பாரிய அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டவர்கள். அவர்களை தூற்றியவர்கள் இன்று வந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டு நிற்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் எந்தவொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம். அதேநேரம் , கடந்த காலங்களில் எங்கள் மீது அவதூறுகளை பரப்பிய எந்தவொரு அணிக்கும் நாங்கள் ஆதரவு தர மாட்டோம்

அதேநேரம் ஒரு சில சபைகளில் நாங்களும் ஆட்சி அமைப்பதற்கான சூழல்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.

facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (2)
தென்னிலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
New Project t (1)
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தகவல்கள்: சி.ஐ.டியில் முறைப்பாடு!
New Project t
நல்லூருக்கு செல்வோருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
varalakshmi-poojai
வரலட்சுமி நோன்பு: செல்வ வளம் தரும் 3 புனிதப் பொருட்களின் தெரியுமா?
vavuniya-thump
அகில இலங்கை முய் தாய் போட்டிகளில் தேசிய மட்டத்தில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவிகள் சாதனை: அபுதாபியில் நடைபெறும் போட்டிக்கும் தெரிவு
New Project t (3)
இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!