பூஸா சிறையில் கண்டுபிடிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்!

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக நபர்கள் உட்பட கைதிகளிடமிருந்து இந்த தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அறைகளுக்குள் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் ‘சமிந்து தில்ஷான்’ என்பவரின் அறையிலிருந்தும் கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ‘குருல்லா’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர் அமில ஹிருஷ்லாலின் அறையில், சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் உள்ள ஒரு குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நௌஃபர் மௌலவியின் அறையில் இருந்து இரண்டு கம்பித் துண்டுகளும் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனையின் போது இணைய அணுகலை வழங்கும் ஒரு ரௌட்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஊழல் அதிகாரிகளின் உதவியுடன் சிறைச்சாலைக்குள் இந்த பொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!