நாமலின் திருமண கொண்டாட்டம்: ராஜபக்ச குடும்பத்துக்கு புதிய பிரச்சினை!

நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வுக்காக 2019 இல் இலங்கை மின்சார சபையின் (CEB) மின்சாரம் தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சுமார் ரூ. 2 மில்லியன் மதிப்பிலான மின்சாரம், தனியார் இல்லம் ஒன்றில் நடந்த திருமண நிகழ்வுக்காக 1.5 கிலோமீற்றர் வீதியை ஒளிரவைத்ததற்காக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது அன்றைய மின்சார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் உத்தரவின்படியும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவின் வேண்டுகோளின்படியும் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், திருமணத்துடன் தொடர்பில்லாத Royalco Aqua Culture (Pvt) Ltd எனும் தனியார் நிறுவனம் மின்சார கட்டணத்தைச் செலுத்தியதாகவும் செய்ததாகவும் தெரியவந்தது.

அதன்படி, மனுதாரர், இந்த செயல் அரசாங்க அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் என வாதிட்டுள்ளார்.

அத்தோடு, மின்சார சபையின் பிரதிநிதிகள், தங்களுக்கு கிடைத்த உத்தரவுகளை மட்டுமே பின்பற்றியதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எந்த பற்றுச்சீட்டும் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 12(1) ஆம் பிரிவின் கீழ் மனுவைத் தொடர அனுமதி வழங்கிய நீதிமன்றம், அடுத்த விசாரணையை 2026 மார்ச் 17 அன்று நடத்த தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் நாமல் ராஜபக்ச திருமண மின்சாரச் செலவினம் தொடர்பான வழக்கு சட்டரீதியாக முழுமையான விசாரணைக்கு நகர்ந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

In the conflict between brothers
சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
The four sluice gates
கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!
Sivajilingam
அவசர சிகிச்சை பிரிவில் வல்வெட்டித்துறை நகரபிதா சிவாஜிலிங்கம் அனுமதி!
italy
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
landslide
பேரிடரில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரணச் சான்றிதழ்!
Woodler
கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்:அநுர அரசின் அதிரடி நடவடிக்கை!