செம்மணி மனிதப் புதைக்குழி பேரவலம் – அகழ அகழ சிறார்களின் என்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்றுடன் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு அகழ்வு இன்றும் நடைபெற்றது.

இதுவரை 34 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, 6 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 34 என்புக் கூட்டுத் தொகுதிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தடயவியல் மற்றும் மானிடவியல் பிரிவில்  வைக்கப்பட்டுள்ளன.

Facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்