கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமதி இராஜரட்ணம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடந்த 27ஆம் திகதி பாண் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது வீதியால் சென்ற பட்டா ரக வாகனம் அவர்மீது மோதியது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்