மட்டுப்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்து : அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் புதன்கிழமைகளில் மூடப்படுவதால், அன்றைய தினங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுவதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக (உதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லுதல்) மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதன்கிழமைகளில் பயணங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு தனியார் துறையினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சபை மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சாத்தியமான இடங்களில் தனியார் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது பொதுப் போக்குவரத்துக்கான கேள்வியைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமைகளை பொது விடுமுறை தினங்களாக அறிவித்ததன் மூலம் எதிர்பார்க்கப்படும் மக்களின் நடமாட்டக் குறைப்பிற்கு இணங்க, வரையறுக்கப்பட்ட போக்குவரத்து சேவைகளை மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரம் ஒதுக்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்