2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வேதனம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவுகள் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, மொத்தமாக மூன்று கோடியே, 3 இலட்சத்து, 3,454 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கான செலவு அறிக்கைகளை மையப்படுத்தியே இந்த செலவுத் தொகையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.