இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில்!

இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதிவாகியுள்ளார்.

இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது.

நாட்டின் முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என பலர் ஜனாதிபதிகளாக பதவி வகித்திருந்தனர்.

தற்போது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். ரணில் விக்ரமசிங்கவுக்கு முதல் பதவி வகித்த அனைத்து ஜனாதிபதிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை.

ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எந்தவொரு அரசாங்கமும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க முற்பட்டதில்லை.

ஆனால், முதல் முறையாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ் கடந்தகால அரசாங்கங்களின் ஊழல், மோசடிகள் மற்றும் அரச நிதியை வீண் விரயம் செய்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முன்னாள் அமைச்சர்கள், எம்.பிகள், அரச நிறுவனங்களில் பிரதானிகளாக மற்றும் அதிகாரிகளாக பணியாற்றிய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சமகால அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பின்புலத்திலேயே தற்போது ரணில் விக்ரமசிங்கவும் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைதுசெய்யப்படுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவரும் பின்புலத்திலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்