ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமர்வில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.
இதன்படி அவர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.45 இற்கு இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.