உலகளவில், மக்களின் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு சமூக வலைதளமாக யூடியூப் விளங்கி வருகிறது. நமக்கு ஏதாவது ஒன்று தெரியவில்லை என்று நினைத்தால், அதற்கான விடை யூடியூப்பில் கிடைக்கும் என்பதே பொதுவான நம்பிக்கை.
யூடியூபில் சேனல் தொடங்குவது எளிது என்பதால், பல இணைய பயனர்கள் தங்களுக்கென சேனலை தொடங்கி, தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதில், அமெரிக்காவை சேர்ந்த “மிஸ்டர் பீஸ்ட்” என்ற யூடியூப் சேனல் தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் இந்த சேனலை நடத்தி வருகிறார்.
2017ஆம் ஆண்டில் “I counted to 100,000” என்ற வீடியோவின் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றார்.
இந்நிலையில், யூடியூபில் 40 கோடி சந்தாதாரர்களை பெற்ற முதல் யூடியூபர் என்ற வரலாற்றை மிஸ்டர் பீஸ்ட் படைத்துள்ளார்.

இந்த சாதனையை கௌரவிக்கும் விதமாக, யூடியூப் நிறுவனத்தின் CEO நீல் மோகன் அவருக்கு பிரத்யேகமான “Play Button” வழங்கி கௌரவித்துள்ளார்.