சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!

மாலைதீவின் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகளை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு குற்றவியல் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் ஜனவரி 10 ஆம் திகதியன்று நள்ளிரவு சுமார் 12:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக அன்று இரவே இருவரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்கள், 46 மற்றும் 43 வயதுடைய இலங்கை பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த திங்கட்கிழமை அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியபோது, 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், கைதான இருவரும் கௌரவமான வேலைகளில் இருப்பவர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாங்கள் விமான நிலையத்தில் சண்டையிட்டது உண்மை தான் என்றும், ஆனால் அது ஒரு குற்றத்தைச் செய்யும் நோக்கத்தில் செய்யப்பட்டதல்ல என்றும் இருவரும் வாதிட்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ranil
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
accident
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து
anura-julie chung
பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
jaffna death
யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
arrest
பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்: தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது
kilinochchi
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து 04 பேர் பலி!